• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் அரசிதழில் வெளியீடு..!

Byவிஷா

Apr 11, 2023

தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியதையடுத்து, இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் அரசிதழில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.