• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஜெல்லி மிட்டாய்..!

Byதரணி

Apr 10, 2023

சுகாதரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஜெல்லி மிட்டாயை தடை செய்து பள்ளியில் படிக்கின்ற குழைந்தைகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை மனுவாக வைத்திருக்கின்றனர்.
படிக்கின்ற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடன் பழகும் மற்ற குழந்தைகளும் சேர்ந்து ஆசையாய் வாங்கி சாப்பிடுகின்ற ஜெல்லி என்ற மிட்டாயில் பிளாஸ்டிக் ஜீரணம் ஆகாததுமான பொருள் உள்ளது.

இதை சாப்பிடுகின்ற குழந்தைகள் உயிரே போய்விடும் என்று கூறுகின்றனர். எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகிய தாங்கள் உடனடியாக முடிவெடுத்து எடுத்து வருங்கால சந்ததியினரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என சமூக ஆர்வலர் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.