• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தென்காசி அருகே குளிர்பானக்கடையில் தீ விபத்து

Byஜெபராஜ்

Mar 28, 2023

புளியங்குடியில் குளிர்பான கடையில் தீ 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி யது தொடரும் தீ விபத்தால் பொதுமக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடி பேருந்து நிலையம் தென்புறம் குளிர்பான கடை நடத்தி வருபவர் சொல்லக்கரை தெருவை சேர்ந்த ராஜாமணி மகன் ஹரி கோபாலன் (55) இவர் நேற்று இரவு 10 மணிக்கு கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார் இரவு 12 மணிக்கு கடைக்குள் இருந்து புகை வந்தது இதைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயணைப்பு அலுவலர் ஜேக் அப்துல்லா ஏட்டையா சாகுல் ஹமீது தீயணைப்பு வீரர்கள் ஆனந்த கண்ணன் சிவகுமார் ராஜதுரை பரிணாம சுந்தர் ஆகியோர் போராடி தீயை அணைத்தனர் .மேலும் சம்பவ இடத்திற்கு இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் பால்ராஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே டி என் புது குடி மரக்கடையில் தீப்பிடித்து எரிந்து சாம்பலானதால் குற்றவாளியை தேடி வரும் நிலையில் கடையை அடைத்து இரண்டு மணி நேரத்திற்குள் தீப்பிடித்து பொருட்கள் சாம்பலானதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.