• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்பு

Byp Kumar

Mar 21, 2023

தமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தனர்.
தமிழக வேளாண் பட்ஜெட்டில் இராமநாதபுரத்தில் மல்லிகை பூ செடிகளை உற்பத்தி செய்யவும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத் தர திட்டம் அறிவித்து 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,


இந்நிலையில்,மதுரை மாட்டுத்தாவணி பூ வணிக சங்கத் தலைவர் ஏ.வி.பிரபாகர் கூறுகையில் “மல்லிகை பூ விவசாயத்தை மேம்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் மல்லிகை பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும்,
மல்லிலை பூ விவசாயம் மேம்படுத்த அரசு நேரடியாக நடவடிக்கைகள் எடுப்பதால் தரமான பூக்கள் கிடைக்கும், வருடத்திற்கு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதற்கு தமிழக முதலமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருக்கு நன்றிகள்” என கூறினார் தமிழகத்திற்கு அன்னிய செலாவணி கிடைக்கக்கூடிய மல்லிகை பூ சென்ட்க்கு தனியாக அனுப்பப்படுகிறது வெளிநாட்டிற்கு அனுப்பிய சென்டாக தயாரித்த பின்பு தமிழகத்திற்கு வருகிறது இதனை மல்லிகைப்பூசென்ட் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கிஅரசு நடத்த வேண்டும் இதன்மூலம் விவசாயிகள்பலனடைவார்கள் இதன் மூலம் வரக்கூடிய அன்னிய செலவாணி முழுவதும் தமிழகத்திற்கு கிடைக்கும் இந்த தொழிற்சாலையின் மூலம் உலகம் முழுவதும் மல்லிகை பூ வாசத்தினை பரவச் செய்யலாம் என கூறினார்