• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டிற்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது – அமைச்சர் ஐ.பெரியசாமி

கன்னியாகுமரியில் இன்று ஆய்வு பணி மேற்கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை கைது செய்து பார்க்கடும் என தொடர்ந்து சவால் விட்டு வருவது குறித்த கேள்விக்கு வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

முழு விசாரணையின் முடிவில் காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு நிதியை குறைத்து கொடுத்த போதும் தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகள் சிறப்பாகவே நடைப்பெறுகிறது. இந்தியாவில் பெரிய மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது . தேர்தல் வரும் பொழுது போர் வருகிறது என்று அண்டை நாட்டினை காரணம் கூறி பாஜகவினர் ஓட்டு கேட்பார்கள். குறுக்கு வழியை பாஜக பயன்படுத்துவார்கள். இந்த நிகழ்விற்கு முன்.குமரியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன்.அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து பேசினார்.