• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு .கூட்டுறவு துறை அமைச்சர் ஐ .பெரியசாமி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5,259 ஏக்கர் பாசனத்திற்காக மஞளார் அணையில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நீரை திறந்து வைத்தார்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் மொத்த நீர் மட்டம் 57 அடியில் 55 அடியை எட்டியது.

இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின் படி மஞ்சளார் அணையில் இருந்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, டி.கல்லுபட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி பெரும் வகையில் 100கன அடி வீதம் இன்று முதல்135 நாட்களுக்கு நீர் திறந்து விடப்படுகிறது.

இதில் 3,386 ஏக்கர் பழைய ஆயக்கட்டிற்க்கு 60 கன அடியும், புதிய ஆயகட்டில் உள்ள 1873 ஏக்கர் நிலத்திற்கு 40கன அடிவீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையில் பாசனத்திற்கான நீரை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்து மலர் நவதானியங்களை தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகம், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் இருப்பை கணக்கில் கொண்டு 135 நாட்களுக்கு முறைப்பாசனம் தேவைக்கு ஏற்ப அமுல் படுத்தப்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தமிழ் நாடு மின்வாரியத்தில் 9 நபர்களுக்கு வாரிசுதாரர்களின் பணி நியமன ஆணையை அமைச்சர் ஐ. பெரியசாமி வழங்கினார்.