• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

மது போதையில் சாலையில் படுத்து இளைஞர்கள் பேருந்தை நிறுத்தி ரகளை – தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி

மது அருந்திய மூன்று இளைஞர்கள் சாலையின் நடுவே நின்று அவ்வழியாக வந்த கல்லூரி பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த குமாரகுறிச்சியில் உள்ள மதுபானக் கடையில் நேற்று மாலை மது அருந்திய மூன்று இளைஞர்கள் சாலையின் நடுவே நின்று அவ்வழியாக வந்த கல்லூரி பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அதில் ஒருவர் சாலையின் நடுவே படுத்து, கல்லூரி பேருந்தை மேலும் செல்ல விடாமல் தடுத்தார். இதனால் அச்சமடைந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்திய நிலையில்,


இதனை அப்பகுதியில் இருந்த சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி இளையான்குடி காவல் நிலையத்தினரின் கவனத்திற்கு சென்றது.

ரகளைகள் ஈடுபட்டவர்களை வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்டு, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட குமாரகுறிச்சி பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.