• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள் – வதந்தி என மதுவந்தி மறுப்பு!..

Byமதி

Oct 15, 2021

நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாததால் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பா.ஜ.க,வின் செயற்குழு உறுப்பினரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று, சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள சொந்தமாக வீடு வாங்கியுள்ளார்.

சில மாதங்கள் கடனுக்கான தவணை கட்டிய மதுவந்தி, அதன்பின்னர் தொடர்ந்து தவணை பணம் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நிதி நிறுவனஅதிகாரிகள் வட்டிப் பணத்துடன் அசலையும் சேர்த்து ஒரு கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாய் பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆனால், மதுவந்தி உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மதுவந்தியின் வீட்டை சீல் வைக்க உத்தரவு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் தேனாம்பேட்டை எஸ்.ஐ., ரத்தினகுமார், தேவராஜ் , வழக்கறிஞர் வினோத் ஆகியோர் மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். அந்த வீட்டின் சாவியை நிதி நிறுவனத்தின் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வீடு சீல் வைப்பதாக வெளியாகும் செய்திகள் எல்லாம் பொய். அதை எல்லாம் உடனே நிறுத்துங்கள். எனக்கு அதிர்ச்சியாக, கோபமாக இருக்கிறது. இது தொடர்பாக பொய்யான செய்திகள் வெளியாகி வருகிறது என்று கோபமாக பதில் அளித்துள்ளார். அதாவது தனது வீடு சீல் வைக்கப்பட்ட செய்திகள் எல்லாம் பொய் என்று மறுத்துள்ளார்.