• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் சரஸ்வதி சன்னிதானங்களில் சிறப்பாக நடைபெற்ற ஏடு தொடங்கும் நிகழ்வு!..

நவராத்திரி விழாவில் விஜயதசமியை முன்னிட்டு நாளை குழந்தைகளின் கல்விக்கான ஏடு தொடங்கும் வித்யாம்பரம் நிகழ்ச்சி நடைபெற்றுவது வழக்கம். ஆனால் நாளை கோவில்கள் திறக்க அரசின் தடை உத்தரவால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி சன்னிதானங்களில் ஏடு தொடங்கும் நிகழ்சிகள் இன்று காலை நடைபெற்றது. தமிழக அரசு இன்று மாலை தான் வாரத்தின் அனைத்து நாடுகளிலும் கோவில்கள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

எனவே, இன்று காலையே நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள வனமாளீஸ்வரர் கோவிலில் சரஸ்வதி சன்னிதானத்தில் தங்க மோதிரத்தால் குழந்தைகளின் நாவிலும் பச்சரிசியில் எழுத்துகளை எழுதி ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்சிகளில் கலந்து கொண்டனர்.

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கினால் கல்வி அறிவில் அவர்கள் சிறப்பாக இருப்பார்கள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.