• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மதுரை -திருமங்கலம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ByKalamegam Viswanathan

Mar 3, 2023

திருமங்கலம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாயப் பெருமாள் மற்றும் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம் .


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கண்டு குளம் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்குப் பின்பு பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாய ப்பெருமாள் மற்றும் ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது . முன்னதாக , அங்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. முதல் கால பூஜை மற்றும் இரண்டாம் கால பூஜை மூல மந்திர ஹோமங்கள் மற்றும் பூர்ணாஹூதி மற்றும் குடப் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை , வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கோவில் கோபுரத்தின் மேல் மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.
இவ்விழாவில், திருமங்கலம், சாத்தங்குடி , கண்டு குளம் , குதிரை சாரி குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..