• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஈரோடு இடைத்தேர்தலில் 75 பேர் டெபாசிட் இழப்பு

ByA.Tamilselvan

Mar 2, 2023

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்ற நிலையில் போட்டியிட்ட 77 பேரில் 75 டெபாசிட் இழந்துள்ளனர்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளில் இதுவரை 12 சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91, 066 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 6,357 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 836 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனிடையே இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். .