• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மஞ்சூரில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் மதிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தாலுகா வாரியாக கண்டன கோஷங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன இதில் ஒரு பகுதியாக மஞ்சூர் பஜார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் அலியார் தலைமை தாங்கினர் சிஐடியு நிர்வாகி ருத்ரன் மாதர் சங்க செயலாளர் ஜெயந்தி முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊட்டி நகர செயலாளர் நவீன் சந்திரன் கோரிக்கைகளை குறித்து விளக்கிப் பேசினார்கள் .


இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசின் 2023 ஆண்டுக்கான பட்ஜெட் மக்கள் மீதான மற்றொரு கொடூர தாக்குதலாக அமைந்துள்ளது ஜி எஸ் டி பண மதிப்பு இழப்பு போன்ற காரணங்களால் மக்கள் பெருமளவு பாதித்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் உணவு உரம் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு போன்றவற்றுக்கான விலை அதிரடியாக உயர்ந்து பெருமளவு பாதிப்புகள் ஏற்படும் அங்கன்வாடி ஆசா பணியாளர்கள் சத்துணவு ஊழியர்களுக்கு நிரந்தர பணியை வழங்கி ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும் நாளுக்கு நாள் குறைந்து வரும் வேலை வாய்ப்பு இன்மையால் போக்கி வேலை வாய்ப்பினை அதிகப்படுத்த வேண்டும் ஏழை எளிய மக்களை பாதிக்கும் மறைமுக வரியை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்