• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முக்கிய வேட்பாளர்கள் வாக்களித்தனர்

ByA.Tamilselvan

Feb 27, 2023

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் வாக்களித்தனர்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பாக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.

தே.மு.தி.க. சார்பில் ஆனந்த்

நாம் தமிழர் கட்சி மேனகா நவநீதன்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறைவேற்றினார்.
அதே போல அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த்,நாம் தமிழர்க கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட வேட்பாளர்கள் வாக்களித்துவருகின்றனர். தேர்தல் அமைதியாக நடைபெறுவதாக தேர்தல் அலுவர் தெரிவித்துள்ளார்.