• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

மதுரை மாணவர்கள் மாநில அளவில் 6 பதக்கங்கள் பெற்று சாதனை

ByKalamegam Viswanathan

Feb 14, 2023

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 6 பதக்கங்கள் பெற்று சாதனை படைந்த மாணவர்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகளில் மதுரை கோ.புதூர் அல். அமீன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சையது சம்சுதீன் குத்துச்சண்டையில் வெண்கலப்பதக்கமும், ஜூடோவில் கிஷோர் குமார் தங்கப்பதக்கமும், நபித் அஸ்லம், முகம்மது ரியாஸ் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஈஸ்வரன் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர். வாள் சண்டையில் புரோஸ்கான் வெள்ளிப் பதக்கமும் என மொத்தம் 6 பதக்கங்கள் பெற்று பள்ளிக்கும், மதுரை மாவட்டத்திற்கும் பெருமையும், சாதனையும் படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமைஆசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார், உதவித்தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களையும், மாணவர்கள் சாதனை புரிய பயிற்சியளித்துஉறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குநர் அமீத், உடற்கல்வி ஆசியர்கள்காதர், மன்சூர் ஆகியோரை பாராட்டி மகிழ்ந்தனர். மேலும், ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.