• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜக வினர் போராட்டம்

ByKalamegam Viswanathan

Feb 13, 2023

பாஜக கட்சி பிரமுகர்களை அவனியாபுரம் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் பாஜக வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.


மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள பிர்தெளஸ் பள்ளிவாசல் மண்டபத்தில் தடைசெய்யப்பட்ட மோடி டாக்குமென்ரி திரைப்படத்தை திரையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக வினரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். மோடி ஆவண படத்தை வெளியிட்ட வரை தடுக்க சென்ற பாஜக மாவட்ட தலைவர் சசிகுமார், பாரதிராஜா, சோலை மணிகண்டன், ஜெயகணேஷ், கருப்பையா மதன், தமிழ்செல்வி, உள்ளிட்ட ஏழு பேரிடம் அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினரை எதிர் தரப்பினர் தாக்கியதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் மற்றும் கட்சி பெண் பிரமுகர் உட்பட சிலர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிபட்டுள்ளார்.