• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி மருத்துவமனையில் ஸ்டெல்லட் டிரைவன் முறையில் இதய நோய் சிகிச்சை

Byp Kumar

Feb 10, 2023

ஸ்டெல்லட் டிரைவன் LOT ICT என்ற புதுமையான முறையில் சிகிச்சை அளித்து இதய நோயிலிருந்து 58 வயதை பெண்ணை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மருத்துவமனை
இதயத்தின் இடது கீழரை கோளாறுகளுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக 58 வயது பெண் சுவாசம் பிரச்சனையால் இப்ப அவதிப்பட்டு வந்துள்ளார். இதய செயலிழப்புக்காக அதிகபட்ச மருத்துவ சிகிச்சை இருந்த போதிலும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் நான்கு தடவை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது இவருக்கு அவசியமாக இருந்துள்ளது.கடுமையான இதய செயலிழப்பு பிரச்சனையோடு இந்நோயாளி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார் பெண்ணின் இதயத்தை பரிசோதித்த பிறகு Morphology என்ற சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தது.
மீனாட்சி மருத்துவமனை மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் இது பற்றி கூறியதாவது நவீன மேம்பட்ட சிகிச்சையின் மூலம் பலன் பெறக்கூடிய நோயாளிகளுக்கு பெரும்பான்மையினருக்கு தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய இந்த நவீன சிகிச்சைகள் பற்றி அறியாமலே உள்ளனர். பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை மற்றும் பலர் திறன்களை கொண்ட நிபுணத்துவமிக்க மருத்துவர்கள் நவீன சாதனங்கள் தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமான நோய்களுக்கு அவர்களின் நலனை மையமாகக் கொண்டு உயர்தர சிகிச்சை வழங்குவதே எமது இலக்காகும் என்று தெரிவித்தார்.


இப் பெண்ணின் இருதய பாதிப்பு குறித்து பேசிய இதவியல் துறையின் மருத்துவ நிபுணர் டாக்டர் செல்வமணி கூறியதாவது இதயத்தின் இடது கீழறையில் கணிசமான செயலில் இருப்பதால் defibrillator என்பதை இந்த நோயாளிக்கு நாங்கள் பொருத்த வேண்டிருக்கிறது. மேலும் திடீர் மாரடைப்பு அவர்களுக்கு ஏற்படாமல் தடுப்பதை உறுதி செய்வதும் அவசியம் ஆகிறது. எனவே LBBP செயல் முறையானது அதிக சவாலான விஷயமாகும். எனவே இந்த நோயாளிக்கு ஸ்டெல்லர் டிரைவன் LOT ICT என்ற செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. LBBP உடன் மிக நன்றாக செயல்படும் காரணமாக CRT என்பதை இந்த நோயாளிக்கு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என கூறினார். மேலும் இரட்டைச் சேம்பர் கொண்ட ICD இப் பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. மருத்துவ செயல்முறைக்காக வழக்கமான பேஸிங் வீடுகளுடன் கூடிய ஒரு கண்டிஷன் சிஸ்டம்க்காக தயாரிக்கப்பட்ட தனித்துவமான திசைதிருப்பக்கூடிய கூடிய கதீட்டர் பயன்படுத்தப்பட்டது. கரோனரி சைனீஸ் லிடு வைக்கப்பட்டுள்ளது, மற்றும் மருத்துவ செயல்முறை இதனோடு நிறுத்தப்பட்டது என்று டாக்டர் செல்வமணி தெரிவித்தார்..இந்நிகழ்வில் மீனாட்சி மருத்துவமனை மருத்துவ நிர்வாகி கண்ணன் டாக்டர் செல்வமணி, டாக்டர் சம்பத், டாக்டர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்