• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

*சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை போலீசார் கிழித்தெறியும் காட்சிகள்*

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாநில பேச்சாளர்கள் சாட்டை துரைமுருகன், ஹிம்லர், ஆகியோர் உரையாற்றினர் இதில் சாட்டை துரைமுருகன் தமிழக முதலமைச்சரை வரம்பு மீறி விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி போஸ்டர்கள் மற்றும் கட்சியின் புலிக் கொடியை போலீசார் கிழித்தெறிந்ததாக குற்றம் சாட்டி போலீசாருக்கு சவால் விடும் ரீதியில் மற்றொரு மாநில பேச்சாளரான ஹிம்லர் பேசியிருந்தார், அவர் மீதும் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது பதியப்பட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தக்கலை அருகே சித்திரம்கோடு எனும் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை இரண்டு இருசக்கர வாகனத்தில் போலீஸ் சீருடையில் வந்த மூன்று போலீசார் கிழித்தெறியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது