• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

‘அண்ணாத்த’ டீசர் வெளியீடு அப்டேட்ஸ்!..

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தை சிவா இயக்கி உள்ளார். மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் வெளியாக உள்ளது.

இதைடுத்து கடந்த 4ஆம் தேதி அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்து வெளியான நயன் தாரா உடனான காதல் பாடலும் வைரல் ஆனது. இந்நிலையில், வருகிற 14ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க என்ற வாசகத்துடன் தயாரிப்பு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டீசர் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.