• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொரோனா தாக்கிய ஆண்களின் விந்து தரம் பாதிப்பு- அதிர்ச்சி தகவல்

ByA.Tamilselvan

Jan 5, 2023

கொரோனா வைரஸ், தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக எய்மஸ் மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது..
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவின் புதிய மாறுபாடுகளால் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ், தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து டெல்லி, பாட்னா மற்றும் ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல் 2021-க்கு இடையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 முதல் 43 வயதுக்கு உட்பட்ட 30 ஆண்களின் விந்தணு சோதனை என்று அழைக்கப்படும் விந்து பகுப்பாய்வு அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
30 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 12 பேருக்கு (40 சதவீதம்) விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தது. இரண்டரை மாதங்களுக்கு பிறகு 3 பேருக்கு இந்த பிரச்சினை இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், முதல் விந்து மாதிரியில் 30 பேரில் 10 பேரின் விந்தணுவின் அளவு 1.5 மில்லிக்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. பொதுவாக இந்த அளவானது 1.5 முதல் 5 மில்லி வரை இருக்க வேண்டும். இதேபோல, விந்து திரவத்தின் தடிமன், உயிர்ச் சக்தி மற்றும் மொத்த இயக்கம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.