• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு மருத்துவமனைகளில் காதுகேட்கும் கருவி இருப்பு வைக்க கோரி கலெக்டரிடம் மனு

Byதரணி

Jan 2, 2023

இலவச காதுகேட்கும் கருவிகளை  அரசு மருத்தவமனைகளில் போதிய அளவு இருப்பு வைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கு உடனுக்கு உடன் வழங்க கோரி   பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன் மதுரை கலெக்டரிடம் மனு.
     தமிழக அரசின் சார்பாக அனைத்து அரசு மருத்துவமனைகளின்மூலம் காதுகேட்கும் கருவி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது விசாரித்த வரையில் காதுகேட்கும் கருவி மதுரை அரசு மருத்துவமனைகளில் இருப்பு இருப்பதாக தெரியவில்லை.
குறிப்பாக திருப்பரங்குன்றம் அரசுமருத்துவமனையில் வெகுநாட்களாக காதுகேட்கும்கருவி இருப்பு இருப்பதாக தெரியவில்லை.பல நாட்களாகவே இருப்பு இல்லை என தகவல் வந்துள்ளன.இதனால் காது கேட்காத நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளின் நலன் காத்து அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து தொய்வின்றி செயல்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.