• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.65 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.45 கோடியாக அதிகரித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள
220-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 12 லட்சத்து 38 ஆயிரத்து 979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 63 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 84 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 96 ஆயிரத்து 38 பேர் உயிரிழந்துள்ளனர்.