• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பொங்கல் பரிசுத் தொகுப்புடன்
முழு கரும்பு: மக்கள் நீதி மய்யம்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததைக் கண்டித்து மதுரையில், மேலூர் அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மக்கள் நீதி மய்யத்தினர் பங்கேற்றனர். மேலும், அரசை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, கரும்பைச் சேர்த்து வழங்குமாறு மக்கள் நீதி மய்யம் தமிழக அரசை வலியுறுத்தியது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என்று பதிவிட்டுள்ளது.