• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாழடைந்த கட்டிடத்தால் பொதுமக்கள் அச்சம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்..

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட 17 ஆம் வார்டு தேவாலா பஜார் பகுதியில் நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான பயணிகள் நிழற்குடையுடன் கூடிய வணிக வளம் கட்டிடம் செயல்பட்டு வருகிறது.
இக்கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது.இந்த கட்டிடத்தில் தற்போது சில கடைகளும் கட்டண கழிப்பறையும் உள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் பேருந்து வரும் வரையில் இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் கட்டிடத்தின் மேற்கூரிலிருந்து சிமெண்ட் கலவை இடிந்து விழுந்ததால் கட்டிடத்தில் உள்பகுதியில் நின்றிருந்தவர்கள் அச்சமடைந்தனர். தற்போது இந்த வணிக வளாக கட்டிடம் உறுதி தன்மையை இழந்து மேற்குரையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிதலமடைந்து காணப்படுகிறது.
எனவே இக்கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை சம்பந்தப்பட்ட நெல்லியாலம் நகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.