• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொங்கல் தொகுப்பு: இன்று முதல் டோக்கன் வினியோகம்!

ByA.Tamilselvan

Dec 27, 2022

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 2-ம் தேதி அன்று சென்னையிலும் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ரூ.1,000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.