• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அவதார் 2 படத்தின் பிரமாண்டசாதனை

ByA.Tamilselvan

Dec 27, 2022

அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 10 நாட்களில் 7000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்த ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 16ஆம் தேதி வெளியானது.
முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. Also Read – வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..! படம் வெளியாகி 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், உலகம் முழுவதும் ரூ.3,500 கோடியை வசூலித்து மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், இந்திய அளவில் மட்டும் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரம் கோடியில் உருவான இப்படம் அதன் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.