• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம்சேர்த்து வழங்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் சேர்த்து வழங்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- உழைப்பவர் கொண்டாடும் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிக்கைக்கு, ரேசன் அட்டைக்கு ரூ.1000 உட்பட பரிசுப் பொருட்கள் வழங்கும் தமிழக அரசு, செங்கரும்பும், கட்டி வெல்லமும் இன்ன பிற பொருட்களும் சேர்த்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். செங்கரும்பும் விவசாயிகளிடமும், வெல்லம் உற்பத்தியாளர்களிடமும் நேரடியாகவே அரசு கொள்முதல் செய்யலாம். இதனால் விளை பொருளுக்கு சந்தையிலும் நல்ல விலை கிடைக்கும், பொங்கலின் இனிமை மென்மேலும் பெருகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.