• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 23, 2022

சிந்தனைத்துளிகள்

எதிரி இல்லையென்றால் சண்டை இல்லை
சண்டை இல்லையென்றால் வெற்றி இல்லை
வெற்றி இல்லையென்றால் மகுடம் இல்லை.

ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர்
நம்பிக்கையை பெற்றுள்ளார்;
நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.

தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில்
பயன் எதுவுமே இல்லை.
அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.

நல்லவர்கள் செய்யும் உதவி, பூமிக்கடியில் இருக்கும் நீர்போல.
தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது.
ஆனால், பூமியின் மேற்பரப்பில் பயிர்பச்சைகளை செழுமையாக வளரச்செய்யும்.

அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல. அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.

நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
கேட்பதை விட்டுவிட்டு செயல்படுங்கள்;
செயல்பாடு ஒன்றே உங்களை வரையறுக்கும்.

தனது இலக்கினை அடைவதற்கான சரியான அணுகுமுறை
கொண்ட ஒருவனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது
தவறான அணுகுமுறை கொண்ட ஒருவனுக்கு
இந்த பூமியில் எதுவும் உதவ முடியாது.