• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

1,00,008 வடை மாலையில் காட்சி
அளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்..!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (வெள்ளிக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாத்தப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இனைதொடர்ந்து 1,00,008 வடை மாலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அதிகாலை முதலே திரளான ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்ய வசதியாக போலீசார் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.