• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உதகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பாரத பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரியை கண்டித்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம் யோகன தலைமையில், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.