• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உதகையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தீப ஒளி, பாடல் நிகழ்ச்சி

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு உதகையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தில் நடைப்பெற்ற தீப ஒளி, பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகமெங்கும் கிறிஸ்துமஸ் விழா வரும் 25ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதன் முன்னேற்பாடு நிகழ்வாக கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கிறிஸ்துவ மக்கள் இல்லந்தோறும் சென்று பாடல்கள் பாடி ஏசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் நிகழ்வு மற்றும் ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பு பாடல்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உதகையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தாமஸ் தேவாலயத்தில் தீப ஒளி பாடல் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காலை முதல் தொடர் சாரல் மழை பெய்து வந்த நிலையில் கடும் மழை , குடுங்குளிர் நிலவி வந்தது. கடும் குளிரிலும் வெண்ணிற ஆடை அணிந்து பாடல் குழுவினர் ஏசு பிறப்பின் நிகழ்வுகளையும் அவர் பிறப்பின் முக்கியத்துவம் குறித்தும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
இசை குழுவினரின் இனிய பின்னணி இசையோடு பாடல்கள் பாடியது கிறிஸ்துவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்வின் போது நேற்று முன்தினம் தமிழகத்தை தாக்கிய மாண்டஸ் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பு திருப்பலி நடைப்பெற்றது.