• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உதகையில் சாலை பாதுகாப்பு விழா -மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித் துவக்கி வைத்தார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை விதிகளை மதிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.சாலை பாதுகாப்பு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இந்தாண்டு சாலை விபத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 218 சாலை விபத்துக்கள் நடைப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.மேலும் தற்போது மாண்டிஸ் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாகவும், அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.