• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பொதுமக்களுக்கு ஆண்டுக்கு சுமார் 100 நாட்கள் வேலை தரும் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றது. குறிப்பாக இத்திட்டத்தில் இயந்திரங்கள் பயன்பாடு, இடைத்தரகர்கள் பயன்பாடு கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டது. மேலும் விதியை மீறியவர்கள் மீது கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் இவ்வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ‘பிள்ளையார்நத்தம்’ கிராமத்தில் இவ்வேலைவாய்ப்பு திட்டத்தில் சுமார் 150 பேர் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் 100 ரூபாய் வசூல் செய்து, மொத்தத் தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வருகின்றது. ஆனால் சம்பந்தப்பட்ட எழுத்தாளர் பணியாளர்களிடம் பணத்தை பெற்று கொண்டு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரம் பணி மேற்கொண்டு அதற்கான ஜேசிபி இயந்திரத்திற்கு ஆயிரம் ரூபாய் தரப்பட்டது. மீதி இருந்த 14, 000 ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என்றும், மேலும் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மகாத்மா தேசிய காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் , தூய்மை பணியாளர்களுக்கு வாங்கப்பட்ட இயந்திரங்கள் அனைத்தையும் பாதுகாக்காமல் அதனை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், 100 நாள் வேலை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.