• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஜான்பாண்டியன் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடிய கட்சியினர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன டாக்டர் பே ஜான் பாண்டியன் பிறந்தநாளை ஒட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் ஏ செல்வராஜ் தலைமையில் ஈரோட்டில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். அதன் பின் ஈரோடு ஆர்.என்.புதுாரில் அமைந்துள்ள காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் விடுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய அருசுவை உணவு வழங்கப்பட்டடது.இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் மயில் துறையன்,மாவட்ட மகளிர் அணி தலைவர் காஞ்சனா,செயலாளர் சத்யா,இளைஞரணி செயலாளர் சிவா பாண்டியன்,மாநகர செயலாளர் குணசேகரன்,ரஞ்சித், அருள்,சண்முகம், ஆர்கே.எஸ்.குமார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.