• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பழனி முருகன் கோவிலில் சுக்கு காபி வழங்கும் திட்டம் -பக்தர்கள் வரவேற்பு

பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க பழனி முருகன் கோயிலில் சுக்ககாபி வழங்கும் திட்டம் துவக்கம்
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் படிப்பாதை வழியே தான் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும், குளிருக்கு இதமாகவும் இருக்க சுக்கு காபி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது படிப்பாதை வழியே செல்லும் பக்தர்களுக்கு இடும்பர் சன்னதி அருகில் வைத்து சுக்கு காபி வழங்கப்படுகிறது. பக்தர் ஒருவருக்கு தலா 100 மில்லிலிட்டர் வீதம் வழங்கப்படுகிறது. இதை பக்தர்கள் ஆனந்தமுடன் வாங்கி பருகி செல்கின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது வரவேற்கக் கூடியதாக இருப்பதாக பக்தர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, காலையிலயே குளித்துவிட்டு பசியோடு பக்தர்கள் வருவர். எனவே அவர்களுக்கு மிகுந்த களைப்பு இருக்கும். அதனால் தற்போது சுக்கு காபி வழங்கப்படுகிறது. தினமும் சுமார் 5000 முதல் 10000 பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.