• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பழங்குடி மாணவர்களுக்கு நினைவாற்றல் தன்னாற்றல் பயிற்சி

தலைமை ஆசிரியர் பூங்கோதையின் முயற்சியால் தலமலை மாணவர்களுக்கு நினைவாற்றல் தன்னாற்றல் பயிற்சி முகாம்.
தலமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் ஈரோடு கிழக்கு அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான நினைவாற்றல்,மற்றும் தன்னாற்றல் பயிற்சி முகாம் இரண்டு நாள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு அரிமா சங்கத் தலைவர் பிரதீப் தலைமை தாங்கினார் பள்ளி தலைமை ஆசிரியர் செ பூங்கோதை வரவேற்புரை வழங்கினார். மாவட்ட ஆலோசனைக் குழு துணை தலைவர் இளங்கோ இந்நிகழ்ச்சியினை ஈரோடு கிழக்கு அரிமா சங்கம் சார்பாக பள்ளிக்கு வழங்கினார்.பேராசிரியர் அன்பழகன், பயிற்றுநர் தனவேல் ஆகியோர் மாணவர்கள் நினைவாற்றல் மற்றும் தன்னாற்றல் பெருகுவதற்கு ஆழமான பயிற்சிகள், மன ஒருமைப்பாட்டு பயிற்சிகள் அளித்தனர்.


இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் மாணவர்களிடையே படிக்கும் திறனில் தன்னம்பிக்கையும், தெளிவும் ஏற்பட்டது. ஆசிரியர்களுக்கு கற்பித்தல் மேலும் சிறப்புகள் அடைய வாய்ப்புகள் அளித்து, பயிற்சியின் இறுதியில் அதிக மாணவர்கள் முன்வந்து மேடையில் தங்கள் கருத்துக்களை தெளிவுபடுத்தினர்.
இது போன்ற பயிற்சிகள் தனியார் பள்ளிகளிடையே அதிகமாக நடைபெற்று வந்த நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பூங்கோதையின் தொடர் முயற்சியால் கிழக்கு அரிமா சங்கம் ஈரோடு நிர்வாகிகள் முதன்முறையாக தலமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அளித்தனர்.
பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பயிற்சி வாய்ப்புள்ளதாக இருந்தது. இரண்டு நாள் பயிற்சி சிறப்பாக துவங்கப்பட்டு இனிதாக நிறைவு பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஈரோடு கிழக்கு அரிமா சங்கத்திற்கு நிகழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.