• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

துணிவு படம் வெற்றி பெற ஐய்யப்பனிடம் வேண்டுதல் …வைரலாகும் போஸ்டர்

ByA.Tamilselvan

Nov 25, 2022

பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படம் வெற்றிபெற அஜித் ரசிகர்கள் ஐய்யப்பனிடம் வேண்டுதல் செய்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் ‘துணிவு’.இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌
இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.இந்நிலையில் துணிவு படம் வெற்றி பெற அஜித்குமார் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் துணிவு படம் வெற்றி பெற வேண்டி பட போஸ்டர் அடங்கிய பேனரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிடித்தபடி நிற்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி உள்ளது.