• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட்

ByA.Tamilselvan

Nov 25, 2022

சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு மிகபிரமாண்டமாய் தயாராகிவரும் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். சூர்யா 42 இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
மேலும், சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக நடிகை திஷா பத்தானி தெரிவித்திருந்தார். சூர்யா 42 படக்குழு இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை வனப்பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் 60 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் படத்தின் பெரும் பகுதியை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.