• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நாய்சேகர் ரிட்டன்ஸ் ..ரிலீஸ் தேதி அறிவிப்பு

ByA.Tamilselvan

Nov 25, 2022

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டன்ஸ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நாய்சேகர் ரிட்டன்ஸ்”.சுராஜ் இயக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.அதன்படி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிசம்பர் 9ம் தேதி வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸுடன் சந்திரமுகி 2, உதயநிதியுடன் மாமன்னன் ஆகிய படங்களிலும் வடிவேலு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். சந்திரமுகி 2, மாமன்னன் படங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், அந்தப் படங்களின் அப்டேட் வெளியாகும் முன்னரே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை ரிலீஸ் செய்ய வடிவேலு ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளதாலேயே இந்த அவசரம் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன.
இந்த படத்தில் வடிவேலு பாடிய அப்பத்தா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்தபடம் வடிவேலுவுக்கு இது கம்பேக் ஆக இருக்கும் என தெரிகிறது.