• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்

ByA.Tamilselvan

Nov 24, 2022

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் வீடு திரும்பினார்.
ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், உடல்நல குறைவு காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மநீம தலைவர் கமல்ஹாசன் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் இன்று காலை வீடு திரும்பினார் என கூறப்படுகிறது. ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், கமல்ஹாசன் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.