சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 1-ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வாக்குச்சாவடி உறுப்பினர்கள், மகளிர், இளைஞரணி வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளபடும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 1- திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
