• Sun. Apr 28th, 2024

50ஜிபி டேட்டா இலவசம் ?லிங்கை ஓபன் செய்யவேண்டாம் !!!

ByA.Tamilselvan

Nov 23, 2022

ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காண்பதற்காக 50 ஜிபி இணையதள சேவை இலவசமாக வழங்கப்படுவதாக பொய்யான செய்தி உலா வருகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி இணையதள டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்ற தகவல் வைரலாகி வருகிறது. இந்த மெசேஜுடன் ஒரு லிங்கும் உள்ளது. அதை கிளிக் செய்தால் 50 ஜிபி டேட்டா கிடைக்கும் என பரவி வருகிறது.
இந்த தகவல் உண்மையா என்பது குறித்து பேக்ட் செக்கில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போதுதான் இது போலியான செய்தி என தெரியவந்தது. இந்த மெசேஜை நம்பி நிறைய பேர் கிளிக் செய்திருந்தார்கள். அதில் ஒருவர் தான் பணத்தை ஏமாந்த விஷயத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் “லிங்கை கிளிக் செய்த போது கமென்ட் பாக்ஸில் 50 ஜிபி டேட்டா கிடைத்தது என கூறியிருந்தார்கள். அதில் ஒரு லிங்க் இருந்தது அதை கிளிக் செய்தேன்.
100 சதவீதம் லோடு ஆனது. அடுத்ததாக மொபைல் எண் கேட்டது, மொபைல் எண் கொடுத்த பிறகு… இதுக்கு மேலே சொல்ல விரும்பவில்லை. கடைசியில் என் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ 4300 பறிபோனது என்றார்.
இது போன்று வரும்லிங்க்கை ஒபன் செய்யவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.இதுபோன்ற மெசேஜ்களை பகிர வேண்டாம் எனவும் ஏமாறவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி மெசேஜ்களை கண்டால்1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளம்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *