• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வாரிசு அடுத்த பாடல் எப்போ தெரியுமா?

ByA.Tamilselvan

Nov 22, 2022

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் தமிழ் திரை உலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும் விளங்கும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் வெளியீடாக 2023-ஆண்டு ஜனவரில் ரிலீஸாகவுள்ளது.வாரிசு படத்தின் முதல் பாடலாக வெளிவந்த ரஞ்சிதமே பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட்டாகி இதுவரை யூட்யூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.இதை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு டிசம்பர் முதல்வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் விஜய்யின் அறிமுக பாடலாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 24ல் நடைபெற உள்ளது.