உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை அமேசான் அதிரடியாக நீக்கியுள்ளது.
சமூக வலைதளமான டுவிட்டரை ரூ.3½ லட்சம் கோடிக்கு வாங்கிய எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பணியாற்றிய 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார். இதனை தொடர்ந்து முகநூலின் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 13 சதவீதமாகும். இந்த வரிசையில் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசானும் தற்போது இணைந்துள்ளது. அந்த நிறுவனமும் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 3 சதவீதமாகும். அமேசான் நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது 10 ஆயிரம் பேரை நீக்கி அதை உறுதிப்படுத்தியது. பணியில் இருந்து நீக்கியது தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் அந்த நிறுவனம் தகவலையும் அனுப்பி உள்ளது.
10 ஆயிரம் பேரை அமேசான் அதிரடியாக நீக்கியது






; ?>)
; ?>)
; ?>)
