• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் 85 வது ஆண்டு துவக்க விழா

ByP.Thangapandi

Jun 22, 2024

அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் 85 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டியில் முன்னாள் தேசிய செயலாளர் பிஸ்வாஸ் தலைமையிலான நிர்வாகிகள் அக்கட்சியின் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்திய திருநாட்டில் மூன்றாவதாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-ஆல் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற பெருமை கொண்ட அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் 85வது துவக்க விழா இன்று தமிழ்நாடு, வங்கதேசத்தில் உள்ள பார்வட் ப்ளாக் கட்சி நிர்வாகிகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் 85வது துவக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் பிஸ்வாஸ், தமிழ்நாடு பொதுச் செயலாளரும், உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கதிரவன் தலைமையிலான பார்வட் ப்ளாக் கட்சி நிர்வாகிகள் உசிலம்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் 85வது துவக்க விழாவை கொண்டாடினர்.