• Sat. Apr 27th, 2024

நீட் தேர்வில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் 80% பேர் தோல்வி..

Byகாயத்ரி

Sep 8, 2022

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது.

இதில், மருத்துவ இளநிலை படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வில் 17.64 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 56.3% என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா 720-க்கு 715 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாததால், தேர்வு எழுதியவர்களில் 80% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய 17,000 அரசுப் பள்ளி மாணவர்களில் 80% பேர் தோல்வி அடைந்துள்ளதாகவும், கடந்த கல்வியாண்டில் ( 2021-22 ) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வி என தகவல் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *