• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை ஆகாஷ் பைஜூஸை சேர்ந்த 8 மாணவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வின் முதல் மதிப்பெண் பெற்று சாதனை

BySeenu

Feb 14, 2024

இந்தியாவின் பொறியியல், மருத்துவம் போன்ற போட்டி தேர்வுகளில் மாணவ, மாணவிகள் அதிகம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையும் வகையில், இந்திய அளவில் பைஜுஸ் நிறுவனம் தனது பல்வேறு கிளைகள் வாயிலாக சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் மிக கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றான ஜேஇஇ-ல், கோவை ஆகாஷ் பைஜூஸை சேர்ந்த 8 மாணவர்கள், 2024 ஆம் ஆண்டுக்கான, அமர்வில் 97 சதவிகிதம் மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு வடகோவை பைஜுஸ் கிளையில் நடைபெற்றது. மாணவர்களை வாழ்த்தி பேசிய ஆகாஷ் பைஜூஸ் மண்டல இயக்குநர் தீரஜ் மிஸ்ரா, மாணவர்களின் சிறப்பான செயல்பாடானது, ஆகாஷ் பைஜூவின் விரிவான பயிற்சி மற்றும் புதுமையான கற்றல் தீர்வுகளுடன் மாணவர்களை மேம்படுத்துவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக கூறினார். இந்த அமர்வில், ஸ்ரீராம் மஹாலக்ஷ்மி ஆனந்த் இயற்பியலில் 100க்கு 100 சதவிகிதத்துடன் 99.96 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார். ஹரிச்சரண் 99.65 சதவிகிதமும், அபிமன்யு சௌத்ரி 99.26 சதவிகிதமும், சஞ்சய் கண்ணா 99.14 சதவிகிதமும், மதுஷ்யாம் 98.77 சதவிகிதமும், சபரி கிருஷ்ணா 98.34 சதவிகிதமும், நிஷா சைபுல்லா 98.15 சதவிகிதம் மற்றும் எஸ்.அபிஷேக் 97.85 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பைஜுஸ் நிறுவனம் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை இயக்குனர் குடே சஞ்சய் காந்தி, உதவி இயக்குனர் ஸ்ரீனிவாசா ரெட்டி, RSGH தமிழ்நாடு பிரதீப் உன்னிகிருஷ்ணா, கிளை மேலாளர் செந்தில்குமார் உட்பட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.