இன்று தமிழகம் முழுவதும் 3359 காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர்களுக்கான தேர்வு 35 தேர்வு மையங்களில் நடைபெற்றது இந்தத் தேர்வில் 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுத விண்ணப்பித்தனர் . இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் ஜெயிலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் 7ஆயிரத்து 112 ஆண்கள், ஆயிரத்து 677 பெண்கள் என 8,819 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில் 15 பிளாக்குகளில் உள்ள 411 அறைகளில் நடைபெற்ற இந்த தேர்வை பாதுகாப்பாக நடத்த 715 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் , தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி தேர்வு மதியம்12 40 வரை நடைபெற்றது , தேர்வு எழுத வருபவர்கள் காலை 8 மணி ஒன்பது மணிக்குள் வந்து விட வேண்டும் எனவும் இணையதளத்தில் எடுக்கப்படும் தேர்வுக்கான அனுமதி சீட்டு, அதனுடன் ஒரிஜினல் ஐடி புரூப், கட்டாயம் கொண்டு வர வேண்டும், விலை உயர்ந்த பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் கொண்டு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப் பட்டிருந்தது. இருந்தாலும் பலர் செல்போன் விலை உயர்ந்த வாட்ச் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வந்தனர் அதனை போலீசார் டோக்கன்கள் கொடுத்து வரிசைப்படுத்தி அடுக்கி வைத்தனர் மேலும் பெல்ட் கட்டக் கூடாது என அறிவுறுத்தியதால் கல்லூரியின் கம்பி கேட் முழுவதும் பெல்ட் தோரணங்களாக தொங்க விடப்பட்டது ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்ட நபர்கள் தங்கள் மேல் துண்டை வைத்துவிட்டு செல்லுமாறும் மற்றவர்கள் தங்களது கைக்குட்டைகளை வைத்து விட்டு செல்லுமாறும் உத்தரவிட்டிருந்ததால் அனைவரும் தங்கள் கைக்குட்டைகளை வெளியே வைத்து விட்டு சென்றனர் பெண்களுக்கு தனியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியிள் நடைபெற்ற தேர்வை சேலம் சரககாவல்துறை துணைத் தலைவர் (DIG) ராஜேஸ்வரி ஆய்வு செய்தார்….
தொடர்ந்து பேட்டியளித்த நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூறியதாவது…
இன்று நடைபெற்ற எழுத்து தேர்வில் 8,819 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுத விண்ணப்பித்தனர் 7028 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1791 பேர் எழுத வரவில்லை. தேர்வு எழுதியவர்களில் 1677பெண்கள் 5351 ஆண்கள் ஆவார்கள. முதல் கட்ட எழுத்து தேர்வு இன்று முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியான பின் இரண்டாம் கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெறும் இன்று தேர்வு அமைதியான முறையில் நடக்க காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேர்வுகள் தேர்வு மையத்திற்கு வர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என கூறினார்.