• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

துப்பாக்கியை காட்டி மிரட்டி 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

ByG.Suresh

Mar 27, 2025

துப்பாக்கியை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த பாலாஜிக்கு
30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஆட்சியராகப் பகுதியில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகரை சேர்ந்தவர் பாலாஜி ( 44). இவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக (அமைச்சு பணியாளர்) பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வருவார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த 7வயது சிறுமி ஒருவருக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளாராம்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் பாலாஜியை கைது செய்து, அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட பாலாஜிக்கு சிறுமியை மிரட்டியதற்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 2000 அபராதமும், 7 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிற்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ 25000 அபராதமும் விதித்தார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க (30 ஆண்டுகளில்) அனுபவிக்க உத்தரவிட்டார். அபராத தொகையில் ரூ.46 ஆயிரம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கவும், அத்துடன் அந்த சிறுமிக்கு இழப்பீடாக ரூ ஐந்து லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.