ஐஐடி சென்னை தலைமையிலான 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி பரிசோதனைக் கருவியை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் 5ஜி நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டாயம் இந்தியாவில் பயிற்சி சேவை நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 ஜி தொழில்நுட்பம் நாட்டின் பொருளாதாரத்தின் சுமார் 450 மில்லியன் டாலர் பங்கு வகிக்கும்.
5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். நாட்டில் உள்ள அனைத்து கிராமத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் 6 ஜி சேவைகளை தொடங்க முடியும். 6 ஜிதொழில்நுட்ப சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.