• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை – பிரதமர் மோடி!

ByA.Tamilselvan

Aug 26, 2022

2030க்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தான் 5ஜி சேவை தொழில்நுட்ப அலைகற்றை ஏலம் நடத்தப்பட்டது. இன்னும் சில மாதங்களில் 5ஜி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இந்நிலையில் வரும்2030 க்குள் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வட இந்தியாவில் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வழியாக உரையாற்றினார். அதில் பேசி அவர் நாட்டில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விவசாயம்,சுகாதாரத்துறையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்ட்டு வருகிறது. இந்த நேரத்தில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படும் இளைஞர் குழுவை ஆதரிக்கிறோம் என்றார்.